திங்கள், 8 மார்ச், 2010

உண்மையேபேசி ஒருவன் இந்த உலகத்தில் வாழ முடியுமா?


உண்மையேபேசி ஒருவன் இந்த உலகத்தில் வாழ முடியுமா?


பணக்காரன் முதல் பரம ஏழை வரை மிகச் சதாரண காரியத்திற்கு கூட பொய் சொல்வது என்பது மிகச் சாதாரண மாகி விட்டது.எல்லாவற்றுக்கும் அடிப்படை பணம், பணம், பணம் தான்.உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களையும்,  அத்தனை செல்வங்களையும் அடைந்த பிறகும், அவன் தன் சுய லாபத்திற்காக மறுபடியும் சொல்லப்போவது பொய் தான். 

பொய்யின் மறு அவதாரங்கள் ஏமாற்றுவது, கோள் சொல்வது,திருடுவது.

பதவியில் இருப்பவனும் படித்தவனும் பொய் சொல்வதை மிகச் சிறப்பாக செய்கிறார்கள் தான் சொன்னது உண்மை என்று நியாயம் என்று வாதாடுகிறார்கள்.எல்லாம் இந்த வாழ்க்கைக்காக, இந்த நிலையற்ற உடம்பிற்காக.

குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ள நரிக்குச் சொந்தம்,
குள்ள நரி மாட்டிக்கிட்டா வேடனுக்குச் சொந்தம்,
தட்டுக்கெட்ட மனிதனுக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்.
கடைசியில் பார்த்தால் அடங்கப்போகும் அந்த ஆறடி மண்ணு தானே சொந்தம்,  
அந்த ஆறடி மண்ணும் அவனுக்குச் சொந்தமா , சொந்தமில்லையே!

உண்மை மட்டுமே பேசி ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்று சான்றுகள் இல்லை
சரித்திரம் இல்லை. அப்படி ஒருவன் இருந்தால் அவன் மனிதன் இல்லை.