திங்கள், 28 மார்ச், 2011

24 மணி நேரத்தில் 1 மணி நேரம்

24  மணி நேரத்தில் 1 மணி நேரம்  

சுயகட்டுப்படான வாழக்கை, அளவான உணவு , சரியான பழக்கவழக்கங்கள் இவைகளுடன் 1 மணி நேரம் கீழே சொன்னபடி சில பழக்கங்களை பழகுவோம் , பின் மாற்றத்தை பாருங்கள்.
1  மணி நேரத்தை 3  பகுதியாக பிரித்துக்கொள்ளுங்கள்.

முதல் 20  நிமிடம் - பிரார்த்தனை. 

உங்களுக்கு பிடித்த கடவுளர்களை, பிடித்த கடவுள் பாடல்களை மனதிலே நினைத்துப் பாடுங்கள்.அன்றையநாள் நல்ல நாளாக, மகிழ்ச்சி நிறைந்த நாளாக,எங்கும் மகிழ்ச்சி, எல்லோரும் நலமோடு இருக்க பிரார்த்தனை செய்யுங்கள்.

அடுத்த 20  நிமிடம் - உடற்ப்பயிற்சி.

உங்கள் வயதிற்கும் தேக நிலைமைக்கும் ஏற்றவாரு , அதிகமாக உடம்பை வருதிக்கொள்லாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.    

அடுத்த 20  நிமிடம் - மூச்சுப்பயிற்சி.  

முதல் பயிற்சி - மிக சீராக, நிதானமாக சுவாசத்தை, மூச்சு விடுவதையும், மூச்சு காற்றை உள்ளிழுப்பதையும் ஐந்து அல்லது ஆறு தடவை செய்யவும்.

பின் மூச்சு காற்றை உள்ளிழுத்து மூச்சு காற்றை அடக்கி வைத்துக்கொள்ளவும்.பின் மெதுவாக இரு நாசிகளின் வழியாக வெளியிடவும். மூச்சு காற்றை உள்ளிளுப்பது,அடக்கிவைப்பது ,வெளி இடுவது எல்லாம் 1 : 2 : 1
கால அளவிலே இருக்கவேண்டும்.  மூச்சு காற்றை உள்ளிளுப்பது 2  வினாடிகள் அடக்கிவைப்பது 4 வினாடிகள் வெளி இடுவது 2  வினாடிகள் என்ற கால அளவு.இந்த பயிற்சியை 10  முறைகள் செய்வது சிறப்பு.

பின் கட்டை விரலால் இடப்பக்க மூக்கின் துளையை அடைத்துக்கொண்டு வலப்பக்க மூக்கின் வழியே மூச்சினை உள்ளிழுத்து அடக்கி சில வினாடிகள் கழித்து இடப்பக்க மூக்கின் வழியாக காற்றை வெளியிடவும். இந்த பயிற்சியை 10  முறைகள் செய்வது சிறப்பு.
இப்பொழுது  கட்டை விரலால் வலப்பக்க மூக்கின் துளையை அடைத்துக்கொண்டு இடப்பக்க மூக்கின் மூச்சினை உள்ளிழுத்து அடக்கி சில வினாடிகள் கழித்து  வலப்பக்க மூக்கின் வழியாக காற்றை வெளியிடவும். இந்த பயிற்சியை 10  முறைகள் செய்வது சிறப்பு.

மூச்சை அடக்கும் பயிற்சி .30  வினாடிகள் மூச்சை அடக்கி வைத்திருந்து பின் மெதுவாக வெளியிடுவது. இதனை 3 மூன்று முறை செய்யவும்.

முயல் நிமிடத்திற்கு 46  தடவை சுவாசித்து ஆறு ஆண்டுகள் வாழ்கிறது.
ஆமை , முதலை நிமிடத்திற்கு 2  முறை சுவாசித்து 500  ஆண்டுகள் வாழ்கிறது.
மனிதன் நிமிடத்திற்கு 18 முறை சுவாசிப்பதைக் குறைக்க மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் 100 ஆண்டு வாழலாம்.

நாள் ஒன்றில் 1 மணி நேரம் ஒதுக்குவது அவசியம், அத்தியாவசியம்.
 அந்த 1 மணி நேரம் அதிகாலை 6 மணி முதல் 7 மணி என்பது மிகப் பொருத்தமான நேரம். பழக்கம் வாழ்க்கை ரகசியம்.
  
கடைபிடிப்போம், சிறப்புருவோம்.