செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

உயர்வான குணங்கள்

உயர்வான குணங்களே உலகாளும் .
உலகாளும் நிலை வந்தபோதும் ,
தன் நிலை மாறாதிருத்தல் சிறப்பாகும் .
உண்மைக்கு உயர்வுண்டு .
உயர்வுக்கு  தனிச் சிறப்புண்டு .
நன்மை செய்திடல் நலமாகும் .
அன்பு காட்டுதல் அறிவாகும் .
ஆதரித்தல் பண்பாகும் .
உதவி நாடி வருவோருக்கு ,உடன்
உதவிடுதல், உன்னத குணமாகும் .