வியாழன், 13 பிப்ரவரி, 2014

வரவு ,செலவு


 

பணத்திற்கு, 
வரவு, செலவு, 
பார்க்கும் மனிதர்களே ! 

வாழ்ந்த வாழ்க்கைக்கு, 
வரவு ,செலவு, 
பார்பதில்லையே - ஏன்? 

செய்த நல்லவை, வரவிலும், 
கெடுதல்கள், செலவிலும் 
வைத்துக் கணக்குப் பாருங்கள். 

லட்சணம் தெரிந்திவிடும்.


தேனம்மைக்கு நன்மை செய்திடுவாய் தாயே


தேனம்மையே !
தேனினும் இனிய கொழுந்தே,
படும் துயரமெல்லாம்,
விட்டுப் போய்விடும்.
வேண்டும் நல்லுள்ளங்கள்,
கூட்டுப் பிரார்த்தனையால் ,
வேதனைகள் மாறும்.
சீரான வாழ்வு,
சீக்கிரமே அமையும்.
மனமொன்றி வேண்டுகிறேன் ,
அன்னை மீனாட்சி,
அருள் புரிய அழைக்கின்றேன்.


தூய எண்ணங்கள்


மாலையோடு நீயிருக்க
மண  மாலை கனவோடு நானிருக்க
மன்மதக் கனவுகள் மனதிலுருக்க
மனதில் நினைவுகள் நிலைத்திருக்க

கற்பனை தேரில் நாமிருக்க
காலம் மாறாமல் நாம் களித்திருக்க
கட்டுண்ட நேரம் இனித்திருக்க
கடமைகளெல்லாம் ஒளிந்திருக்க

இன்பத்தின் எல்லையை தேடிடுவோம்
இயல்பாய் அதை   சென்றிடுவோம்
இணைந்து இருப்பதே சுகமென்பொம்
இதற்கும் மேலாய்  என்னவென்போம்

அரவணைத்து அள்ளிப் பெறுவது சுகம்
அனைத்தும் நமக்கே என்குது  மனம்
ஆனந்தம் பெற்று மகிழ்வாய் தினம்
ஆரவாரம் தள்ளி விடு புறம்

தூக்க கனவுகளில் இவையே வந்து போக
தூங்காமலிருக்க நான் நினைந்து இருக்க
தூய எண்ணங்கள் ஒன்று சேர
துயரங்கள் என்றும் வாராது.