வியாழன், 25 மார்ச், 2010

வேகத்தடை

வேகத்தடை - தமிழ்நாட்டில் எல்லா சாலைகளிலும், எல்லா ஊர்களின் ஆரம்பத்திலும்,முடிவிலும் பார்க்ககூடிய ஒரு விநோதம்.இதில் ஆச்சரியம்,இது ஊருக்கு ஊர், உயரத்திலும், அளவிலும் வித்தியசமாக இருக்கும்.இதை நிர்மாணிக்கும் பொறியாளர்கள், அந்தந்த ஊர்களின் சண்டியர்கள்.

சட்டம், ஒழுங்கு,போக்குவரத்து, நிர்வகிக்கும் காவல் துறைக்கோ, அந்தந்த ஊர்களில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கோ, அரசுசார்ந்த அதிகாரிகளுக்கோ, நிர்மாணிக்கப்பட்ட வேகதடைப் பற்றி எந்த விவரமும் தெரியாது.

பிரச்சினையே, எந்த அளவிலும் சேராத, உயரமான வேகத்தடைகளினால் தான்.இப்பொழுது வருகின்ற நவீன கார்களில், கார்களுக்கும், சாலைகளுக்கும் உள்ள உயர அளவு மிகக் குறைவாகவே உள்ளது. வேகத்தடை இருக்கிறது என்பதற்கு, எந்தவிதமான முன்னறிவிப்பு வாசகமோ, குறியீடோ, வைக்கவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. இந்த நிலையில், குறைந்த அளவு வேகத்தில் வருகின்ற, கார்கள் கூட , உயரமான வேகத்தடைகளில்  , கடக்கக்கூடிய உயர அளவு இல்லாததின் காரணமாக, அடிப்பக்கத்தில் உள்ள பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டு, கார் உரிமையாளர்களுக்கு பெரும் பொருட்சேதமும், செலவும் ஏற்படுகின்றன. பயணத்தில் கால தாமதமும் ஏற்படுகிறது.

சட்டம், ஒழுங்கு,போக்குவரத்து, நிர்வகிக்கும் காவல் துறை, அந்தந்த ஊர்களில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள்  , அரசுசார்ந்த அதிகாரிகள்,  வேகத்  தடை தேவை பற்றிய சமூக, சிந்தனையும் , அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

யாரைப்பற்றி எனக்கு என்ன கவலை, யாருக்கு எவ்வளவு நஷ்டம், எனக்கு என்ன லாபம் - இது தான் அரசியல் வாதிகளும்  , காவல் துறையும் கவனமாய் கடைபிடிக்கும்  வேத
ம ந்திரம்.

வேகத்தடை வேண்டியதுதான்.மறுக்கவில்லை, யாரும் எதிர்க்கவில்லை. எல்லா இடத்திலும் , ஒரே மாதிரியாக, ஒரே அளவாக, எந்த வாகனக்களுக்கும் இடையூறு   இல்லாமல் நிர்மானிக்கலாமே.

பூனைக்கு யார் மணி கட்டுவது ?

ஒரு பொது நல விரும்பி, ஒரு சமூக சேவகர், ஒரு பொது நல வழக்கு தொடரவேண்டும்.
களம் அமையட்டும், காலம் கணியட்டும், நல்லது நடக்கும். காத்திருப்போம்.
எல்லாம் நன்மைக்கே !                         .       .