ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஆணும்! பெண்ணும்!


ஆணும்! பெண்ணும்!

தொட்டு, தழுவி ,சிலிர்க்கவைப்பது
பெண்ணின் குளுமை  !

பெற்றதை, பெற்று மூழ்கி, துய்த்து
இன்பம் சேர்ப்பது   ஆணின் ஆளுமை !

ஒருவர்  கொடுத்து ஒருவர்  பெறுவது ,
வியாபாரம் .

இருவர் கொடுத்து, இருவரும்  பெறுவது ,
தாம்பத்தியம் .

ஒருவனுக்கு ஒருத்தி, உன்னதம் ,அது
உலகளாவிய தன்னலம் .

கட்டுப்பாடு ,தந்திடும் பொது நலம் .
கடைபிடித்தால், நாடு பெற்றிடும் சுகாதாரம் .