ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

மயிலோடும், மலரோடும்.

மயிலோடும், மலரோடும்,
வந்தான் கந்தன்.

வழியிலே மங்கை ஒருவள்,
நிற்கக் கண்டான்.
காத்திருக்கும் நோக்கமென்ன என்றபோது,
பெண் பார்க்க வந்தவன்,
நல்ல செய்தி சொல்ல வருவான்  
காத்திருக்கிறேன் என்றாள்.

மலரோடு வந்ததால், என்னை
மணப்பாயா என்றாள்.

கந்தனும்,ஐயிந்து வீட்டிலும்,
குடியும் குடித்தனமாய் இருக்கிறேன்,
இந்த விளையாட்டு வேண்டாமென்றான்.
குறவள்ளி மாது கோபம் கொள்வாள், 
இந்திரனின் மகளும் ஏற்க மாட்டாள், 
என்று சொன்னான். .

மாலையோடு நீ நிற்க, 
காரணமென்ன என்று கேட்டாள் மங்கை. 

குன்றென குணம் கொண்டவர்,
தேடுகிறேன்,நானிலத்தில் யாரும் உண்டோ ?

செப்பும் மொழியில், சேர்க்கும் வாழ்வில், 
உண்மை காட்டிடல் கருத்ததாம்.
விண்ணவரும், மன்னவரும், 
மயங்குதல் அறிவாம். 
வரும் பொருள் தந்து, தானம்  
காப்பது செயலாம். 
யுகம் பல கடந்தும், 
காணக் கிடைக்கவில்லை, 
என்றான் முழுதும் அறிந்த முருகன்.    

இவனே ஆறுமுகத்துக் கடவுள் 
ஆறுதல் தருவான், என்று மங்கையும் 
நீயே கதி என்று அவன் காலில் விழுந்தாள். 
   
மங்கையவள்  மனக்குறையை  கொட்டினாள்.

பூத்தும்  சூடாத மலர்கள்,

மலர்ந்தும் பறிக்காத பூக்கள்,

கை பிடிக்க நாயகன் வருவான் என்று,

கால்  கடுக்க நின்ற கன்னியர்கள்.

அவன் வேண்டும் ,இவன் வேண்டும்,

என்று ஏங்கவில்லை.

எங்கள் இதயம் இதம் பெற அழுகிறோம்.

மலர் மஞ்சம் கேட்கவில்லை,

மனம் கொஞ்சும் நெஞ்சம் வேண்டும்.

பெற்றோர் காலத்தில் புகுந்த வீடு பார்க்க,

பெற்றோரின் கண்  கலங்காதிருக்க வேண்டும்.

கசங்காத கருகாத  காகித மலர்களல்ல,

கசங்கவே  காத்திருக்கும் உயிர் பூக்கள்.

உன்னத வாழ்வின்  எச்சம்,

உருகிடும் தாம்பத்தியம் .

திகட்டாத வாழ்கை தந்து ,

தீதறியா  செல்வமும், மகிழ்வும்

தினம்  வேண்டும்.

முருகனே முன் நின்று வழிகாட்டு .

முழு நிலவாய்  ஒளி  தந்து ,

மறக்காத வாழ்வு தருவாயே ,  என்றாள்.

கொஞ்சுதலும், கெஞ்சுதலும் கேட்டு ,

மகிழ்ந்தான் கந்தன்.

பெண்ணே !

பாங்கான வாழ்வு ,

பண்பான  வாழ்வு ,

கண் நிறை கணவன்,

காத்திருந்த காலம் ,

காணமல் போக ,

நித்தம் உன் வாழ்வு ,

நிஜமாக

நினைக்கும் எண்ணம் ,

மகிழ்வாக ,

கோபம் கொள்ளாமல் ,

உன்னை கொடுத்து

வாழ்ந்திடு.

எடுத்ததும் , கொடுத்ததும்,

எது வந்தபோதும்,

நிலைத்திடு, நிலை மாறாமல்.

அன்பு காட்டிடு ,  அரவணைத்திடு ,

மண  மாலை,

சூடிடுவாய்  என்றான் .

(பூச்சூட காத்திருக்கும் கன்னியர்கள்
மன(ண )க் கலக்கம் மாறிடல் வேண்டும்
மணப்பந்தல் ஏறிடவேண்டும்.)




















மறதி

மறதி

சொன்னவை, சொல்லாதவை,
இருந்தவை, இல்லாதவை,
பார்த்தவை, பார்க்காதவை,
படித்தவை, படிக்காதவை,

எல்லாமே எண்ணத்தில்,
நினைவில் நிறுத்திட,
ஏங்கிடும் நேரத்தில்,
இயலாமல் போய்விட,
நினைக்குது  மனசு,
மறக்குது மனசு.

தேவைக்கு நினைவிலில்லை.
தேடினாலும் கிடைக்கவில்லை.
வேண்டாத நேரமதில்,
மாறாமல் தோன்றுது.

நினைவு  சக்தி  சிறக்க,

மறப்பது மாறவேண்டும்,
துறப்பது துறக்க வேண்டும்,
எண்ணங்கள் அசைபோட,
வண்ணங்கள் வழிகாட்ட,
குறிப்பு சில கொண்டு,
நிகழ்வுகள் தொடராக,
மகிழ்வு தருணங்கள் ,
மனதில் நிறைக்க ,

நாளும் பழகிட்டால் ,
பாழும்  மறதி மாறுமே .