புதன், 19 ஜனவரி, 2011

பக்தி

பக்தி  என்பது பன்மடங்கு வளர்ந்து கட்டுக்கு அடங்காத பக்தியாக உள்ளது . பக்தியின் வகையாக , தனிமனித பக்தி, கூட்டுபக்தி, அமைதியான பக்தி,ஆரவாரமான பக்தி என பிரிக்கவேண்டியிருக்கிறது.
முன்பு இருந்த நிலை, வேடிக்கையாகச் சொல்வார்கள்,
சிறைச்சாலைகள் எல்லாம் மூடியே இருக்கின்றன ஆனால் கூட்டமாய் நிரம்பி வழிகிறது ,
கோயில்கள் எல்லாம் திறந்தே இருக்கின்றன மக்கள் வருவேதேயில்லை.
இப்பொழுது உள்ள நிலை சிறைச்சாலைகளும், கோயில்களும் இரண்டிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது .
தனிமனித பக்தி, கூட்டுபக்தி, அமைதியான பக்தி,  இவையெல்லாம் எற்றுக்கொள்ளப்படவேண்டியவை தான்.
ஆரவாரமான பக்தி தேவைதானா ? ஒரு தனி மனிதன் விரும்புகின்றனா ? பண்பான,பக்குவப்பட்ட கூட்டம் தான் இதை விரும்புகிறதா ? ஏன் இந்த ஆரவாரம் ?யாருக்காக இந்த ஆரவாரம் ? பொதுமக்கள் சிந்திக்கவேண்டும்.