புதன், 18 பிப்ரவரி, 2015

தம்பி முருகுவின் சிறப்பு.

சத்தமான சிரிப்பும் ,
பொறுப்பான பேச்சும் ,
உதவும் குணமும் ,
தம்பி முருகுவின் சிறப்பு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
எல்லாச் சிறப்பும் பெற்று ,
சிறந்திட வாழ்த்துக்கள் .

சுந்தரச் சொக்கலிங்கம் !

தேன் சொட்டும் தமிழாலே ,
தினமும் மேடையெல்லாம் ,
முழங்கும் சுந்தரச் சொக்கலிங்கம் !

இன்று பிறந்த நாள் காணும் நண்பருக்கு  ,
மேலும், மேலும் ,
சிறப்புக்கள் நாடி வர வேண்டும்,
திறமைகள் மிளிர வேண்டும் ,
செயல் யாவும் சிறக்க வேண்டும் .
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

டாக்டர் சுவாமிநாதன் அவர்களின் அகவை அறுபத்து ஆறு பூர்த்தி விழா.

சைவமும்,தமிழும் வளர்த்த குலம் ,
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம் ,
நகரத்தார் இனம் .
நன்மைகள் ,  எங்கும் பெருகிடவேண்டும் .
தீமைகள் ,யாவும் நீங்கிடவேண்டும் .
சீர்மிகு மொழியாம் வளமான தமிழாலே ,
வணங்குகின்றேன்,அன்னை மீனாட்சியே ,
வருவாய்,வந்து காத்தருள்வாய்.!

*****************************************************************************

டாக்டர் சுவாமிநாதன் அவர்களின் அகவை அறுபத்து ஆறு
பூர்த்தி விழாவில் கலந்து கொள்வதில்  பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
வாழ்த்தரங்க நிகழ்ச்சியிலும் என்னையும் அமர வைத்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி.

ஆறு ஆறு அறுபத்து ஆறு
ஆறுமுகனின் முகம் ஆறு
அகவை  அறுபத்து ஆறு பூர்த்தி காணும்
டாக்டர் சுவாமிநாதன் அவர்களின்
அருங் குணங்கள் ,நற்குணங்கள் ,,
சொல்லச்  சொல்ல குறையாத வற்றாத ஆறு.

அதிர்ந்து பேசாத அருமைக் குணம்.
புன்னகை தரும் பெருமை முகம்.
தொழிலில்  காட்டிடும்  திறமை வேகம்.
செயல் யாவிலும் பொறுமை காத்திடல் .
உதவி என்று வருவோருக்கு உடன் கொடுத்திடல்.
உள்ளத்து அன்பினை உடன் பகிர்ந்திடல்.
இதன்  பயனாய் இவர் பெற்றவை ,
உயரிய வாழ்க்கை,
சிறப்பான குடும்பம்,
அருமைப் பிள்ளைச் செல்வங்கள் .

அறுபது நடந்த போது நாற்பதாய்க்  கண்டேன்
அறுபத்தாரிலும் நாற்பதாகவே காணுகின்றேன்
தாகத்தோடு கேட்கிறேன் தேக ரகசியம் தான் என்ன ?
ஆச்சியின் நள பாக கைப்பக்குவமா ?
அனைத்துக்கும் கை கொடுக்கும் ஆச்சியின் அனுசரணையா ?
இல்லை ,இல்லை  இருவரின்
கள்ளமில்லா நல்ல உள்ளம் தான் என்பேன் !

எத்தனை தான் டாக்டர் பற்றிச் சொன்னாலும்
அத்தனைச் சிறப்புக்கும் அவரோடு உடன் நின்று
சிறப்புச் சேர்ப்பவர் சேதுக்கரசி  ஆச்சி தான்

டாக்டர் சிறந்த மருத்துவர் என்றால்
ஆச்சி சிறந்த நிர்வாகி.
வாசமில்லா  மல்லிகையைக்  கண்டதுண்டா ?
ஆச்சியில்லாமல் டாக்டர் அவர்களைப்
பொது நிகழ்சிகளில் பார்த்ததுண்டா  ?
எங்கும், எப்போதும் , மகிழ்வோடு,இணக்கத்தோடு
இருக்கும் தம்பதிகள்.
இன்றைய இளம் தம்பதிகள்  எல்லோரும் , பார்த்துப்
பின் பற்ற வேண்டிய தம்பதிகள்.

எது பெரும் சுகம் என்று கேட்டால் ......

பெட்டகம் நிறைய பணம் ; இருந்தால் சுகமா ?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  வயல் இருந்தால் சுகமா ?
சேவகம் செய்ய வரிசையில் ஆள் நின்றால் சுகமா ?
வண்ண, வண்ணப் பட்டுடுத்தி  வளைய வருவது சுகமா ?
விதம் விதமாய் உண்பது சுகமா ?
அழைத்த கூட்டத்தில் தலைமை என்று அமர்வது தான் சுகமா ?

அத்தனையும் சுகமில்லை 

முகம் பார்த்துச் சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு சுகம் .
படுத்தவுடன் வரும் தூக்கம் சுகம் .
ஆதரவான குடும்பம் சுகம் .
பலருக்கு உதவுவது சுகம் .
பகட்டில்லாமல் வாழ்வது சுகம் .
பகையின்றி பண்போடு இருப்பது சுகம் .
உண்மை அன்பும்,நல்ல நட்பும் சுகம் ,
நல்லவன், நல்லவர்  என்ற பெயர் பெறுவதே பெரும் சுகம்.

இத்தனை நற்பண்புகளையும், சுகங்களையும், ஒருங்கே பெற்றவர்கள் 
டாக்டர் தம்பதிகள். 

மதுரை நகரத்தார் சங்கத்தில் (2008-2010ஆண்டில்)
என்னைத் தலைவராகவும்
டாக்டர் அவர்களைத்  துணைத் தலைவரகவும்
பொறுப்புக் கொடுத்தவர்கள் நகரத்தார்கள் .
சிறந்த நிர்வாகக் குழு,திறம்பட செயலாற்ற ஒத்துழைத்த
நல்ல உள்ளங்கள்.
இதற்கு முன்பே டாக்டரோடு நல்ல அறிமுகம் இருந்தாலும்
சங்கத்தின் மூலம் கிடைத்த நல்ல வாய்ப்பு மேலும் இணக்கத்தை
ஏற்படுத்தியது.

இத் தம்பதிகள், இவர் தம் குடும்பம் ,இன்று போல் என்றும் ,
எல்லாச் செல்வங்களும், சிறப்பும், நலமும், வளமும், பெற்று
சிறந்தோங்க வேண்டும் என்பது என் விருப்பம் .
எனது  விருப்பம் ,நிறைவேற ,அன்னையவள் மீனாட்சியும் ,
ஆடவல்லான் ஆனந்தக் கூத்தன் சொக்கேசப் பெருமானும்
அருள் புரிய வேண்டுமென ,மனமொன்றி வணங்குகின்றேன் .

விழாத் தம்பதிகளையும்  வணங்கி, அவர்களுடைய நல்லாசிகளை ,
எனக்கும், என் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டுகிறேன் .
நன்றி. வணக்கம் .