செவ்வாய், 9 மார்ச், 2010

ஏன் மண முறிவு?

ஏன் மண முறிவு?   (சோமசுந்தரம் அருணாசலம்)

திருமண முறிவுக்குக் காரணம் மனம் சம்பந்தப்பட்டதா ?, மணம் சம்பந்தப்பட்டதா ?, இல்லை பணம் சம்பந்தப்பட்டதா?
கேள்வி மிகஎளிமையானது, அனால் நீண்ட பதிலை உள்ளடக்கிய கேள்வி.பதில் மிக ஆழமானது.நீந்திக் கடப்பவனுக்கு ஆழத்தைப் பற்றிய பயமில்லை.உடலில் வலுவும்  ஆரோக்கியமும், நம்பிக்கையும் அவசியம். அதே போன்று உண்மையோடு, நேர்மையோடு, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தோடு பிரச்சினைகளை அணுகினால் யாருக்குமே தோல்வி இல்லை, பிரிவு இல்லை, வெற்றி தான்.

கணவன், மனைவி இருவருக்குமிடையே, மனவேறுபாடுகளும் ,கருத்துவேறுபாடுகளும் ,தவிர்க்கமுடியாதது.பிரச்சினை இல்லாத வாழ்க்கை, உப்பு, சப்பு இல்லாத வாழ்க்கை. அலை இருந்தால் தான் கடல்.பிரச்சினையோடு கூடியது தான் வாழ்க்கை. பிணக்குகளை ,கை யாள்கின்ற முறையில் தான் பிரச்சினையே.கணவன், மனைவி இருவருக்குமிடையே உள்ள பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், கோபதாபங்கள்எல்லாம் இருவருமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.நான்கு சுவர்களுக்கு உள்ளயேஇருக்கவேண்டும், வெளியே போகக்கூடாது.
என்று வெளியே போகிறதோ அன்றே தீர்க்க
முடியாத பிரச்சினைகள் ஆரம்பம் என்று கருதலாம்.
வெளி மனிதர்கள்,எவ்வளவு நெருங்கிய உறவாக, தாய், தந்தையாக இருந்தாலும் கூட, கையாளுகின்ற முறையில்
தன் சொந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காரியத்தை கெடுத்துவிடுகிறார்கள்.
தாய் வீட்டுச் செல்வமும், தான் பெற்ற கல்வியும் ஒரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்கலாமே தவிர ஆதாரமாக நினைத்து விடக்கூடாது.

ஒரு பெண்ணுக்கு தாய் வீடு என்பது கோவில்
அங்கு கும்பிடப்போகலாமே தவிர
குடியிருக்க நினைப்பது தவறு

திருமணம், மனம் சம்பந்தப்பட்டது, பணம் சம்பந்தப்பட்டதல்ல.திருமணம் ஆயிரம்
காலத்துப் பயிர். குறிகிய காலதுப் பயிர் அல்ல. நடவு நட்டு, நூற்றிஎன்பது நாளில் அறுவடை செய்கின்ற நெல் சாகுபடி அல்ல.

திருமணம், பின் மணமுறிவு, பின் திருமணம் என்பது கலாச்சாரச் சீரழிவு, சமுதாயச்
சீரழிவு.பண்பாடற்ற,நாகரிகமற்ற ஒரு சமுதாயம் அமைய ஒரு வழித்  தடம் போட்டுக்கொடுப்பதர்க்குச்  சமமாகும் .

 நான், நீ என்று நினைக்காமல், நாம், நமக்கு என்று நினைத்தாலே, அங்கு மலர் மணம் பரப்பும்,  தென்றல் வீசும்.மனம் என்ற ஜன்னல் திறக்கட்டும்.விட்டுக்கொடுப்போம்.
திருமண பந்தம், தொடரவேண்டிய பந்தம், தொலைத்து விடக்கூடாத பந்தம்.

ஒருமணம், திருமணம், சிறப்புமணம்.மாறாத மனம், மறக்கமுடியாத வாழ்க்கையை அமைத்துத் தரும்.
              
மணமுறிவு, மறுமணம் என்பது அறியாத வார்த்தையாக, அகராதியில் இல்லாத வார்த்தையாக மாற்று வோம் .அடுத்த தலைமுறைக்கு நல்ல வழியை காண்பிப்போம், நல்ல நடைமுறையை விட்டுச் செல்வோம்.                  






























































































































.











i