ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நகரத்தார் நலம் பெற வேண்டும்



உப்பும். பஞ்சும் முதல் தொழில் என்று கொண்டோம் 
உணவிற்கும் உடைக்கும் அதுவே ஆதாரம் என்று செய்தோம் 
கடல் கடந்தும் தொலை தூரப்பயணம் நீயே துணை என்று சென்றோம் 
நா நயமும், நாணயமும், உன் நல்லாசியும் சேர்ந்ததால் 
விரிந்தது தொழில், பெற்றோம்  ஆதாயம். 
பலனில் பெரும் பகுதி கோவில் திருப்பணிக்கே செலவிட்டோம் 
எங்கள் தர்மம் நிலைக்க வேண்டும் எங்கள் குலம் தழைக்க வேண்டும் 
கணப் பொழுதும் உன்னை மறக்கவில்லை 
தொலைந்த தேசமும், விலாசமும் திரும்ப பெறவேண்டும் 
கட்டி வைத்த கோவில்களும், எழுதிக் கொடுத்த நிலங்களும் 
செய்து வைத்த நகைகளும் நீ கொடுத்தது என்று கொடுத்தோம் 
நகரத்தார் தர்மம் என்றே நாடு போற்றுகிறது 
எம் மக்கள்செயல் திறமை  செழிப்புற வேண்டும் 
வானோங்கு கோபுரங்களும் கோட்டை என வீடுகளும் 
அறிவுக் கண் திறக்க அழியா கல்விச்சாலைகளும் 
வரும் தலைமுறை கட்டி காத்திடவேண்டும்  
உறவுகள் பெருக வேண்டும் நிலையாக வேண்டும் 
வழக்குகளும் வம்புகளும் இல்லாமல் போக வேண்டும் 
மண வாழ்க்கை மலர்ச்சியே கண்டிடவேண்டும்   
வரும் காலம் அவர் புகழ் பேச வேண்டும்.   

கருத்துகள் இல்லை: