வெள்ளி, 11 அக்டோபர், 2013

காலன் மேல் கோபம்

விதி என்று சொல்லி வேதனை மட்டும் கூடுகிறதே
சிரிப்பின் மொழி மட்டும் தெரிந்த 
பால் மணம் மாறா 
பச்சிளம் குழந்தையும் பலியாகிறதே 
பிறந்து உடன் வளர்ந்து முகம் பார்த்து 
சிரித்த நாட்கள் 
இன்றோடு முடிந்துவிட்டதே 

ஒன்றரை வருடங்கள் உடன் இருந்த நாட்கள் 
ஓராயிரம் கதைகள் சொல்லுமே 
உள்ளத்தின் பல்லாயிரம் கனவுகள் 
நினைக்க மனமின்றி அழிந்துபட்டதே 

தாயையும் எடுத்துக்கொண்டாய் 
சேயையும் எடுத்துக்கொண்டாய் 
காலனே அவர்களிடம் உனக்கு என்ன முன் பாக்கி 
கொடுமையின் அவதாரங்கள் ஆயிரமாயிரமாய் உலகில் இருக்க 
உனக்கு இவர்கள் மேல் மட்டுமே என்ன அவசரம் 

தீங்கு நினைக்காத தாயும் 
தீங்கரியாத குழந்தையும் 
ஒரு கன நொடியில் 
காலனே உன் காலடியில் 
ஏன் தந்தாய் இந்த வேதனை 
கை பிடித்த கணவன் தனி மரமாய் 
நிற்கச் செய்து விட்டாய் 
மனம் பதை பதைக்க வைத்துவிட்டாய் 
கடலின் நீரெல்லாம் ஒரு நாள் வற்றினாலும் 
மலையெல்லாம் மணலாக மாறினாலும் 
நீ தந்த ரணம் மட்டும் என்றும் ஆறாதே. 

(உறவினர் வீட்டில், தாயும், சேயும் 07.10.2013 அன்று சேலம் - ராசிபுரம் அருகில் ஏற்பட்ட கார் விபத்தில் காலமாகி விட்டார்கள், அதன் வெள்ளிப்பாடு )


கருத்துகள் இல்லை: